தமிழ்

gov

Mayour 2இலங்கையின் தலைநகரமாக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே உள்ளூராட்சி அதிகார பிரதேசத்தில் வரி செலுத்தும் மக்களுக்கு வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்குவதற்காக மாநகரசபையின் மூலம் நிறைவேற்றப்படுகின்ற சேவைகளை ஈ-தொழில்நுட்பம் மூலம் மிகத் துரித சேவையாக வழங்குவதன் ஊடாக அதிசிறந்த மற்றும் உயர் சேவையை வழங்குவதற்காக கோட்டே மாநகரசபை புதிய தொழில்நுட்ப மூலோபாயங்களுக்குள் பிரவேசிக்கும் புதிய நடவடிக்கைபற்றி மிக மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்துகிறேன்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப வாய்ப்புகளை மிக பயனுள்ளவகையில் பயன்படுத்தி பொதுமக்களின் தேவைகள், அதற்குரிய நடவடிக்கை முறைகளுக்கு சம்பந்தப்படவேண்டிய உத்தியோகத்தர்கள், தகவலறியும் சட்டத்தின்மூலம் தகவல்களை விசாரித்தல், வரிப்பண கட்டணங்களைச் செலுத்துதல், கட்டிட விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுதல், உலகத்தில் எந்தவொரு இடத்திலிருந்தும் எங்களுடன் தொடர்புகொண்டு கோட்டே அதிகார பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய அபிவிருத்தி நடவடிக்கைளுக்கு முதலீடுசெய்யும் பெறுமதியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் அத்தோடு ஏனைய சேவைகள் தொடர்பாக தகவல்களை வழங்கி நடைமுறை சிக்கல்கள் இன்றி மிக இலகுவாக எம்மை அடைவதற்கு வரிசெலுத்தும் மக்களுக்கு இந்த இணையத்தலத்தின்மூலம் வசதிசெய்துகொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கால சவால்களுக்காக புதிய தொழில்நுட்ப மூலோபாயங்களைப் பயன்படுத்தி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகரசபையின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுவது எமது எதிர்கால அபிலாஷை என்பதை நினைவுபடுத்துகிறேன்.

ஐ.எம்.வி. பிரேமலால்
நகராதிபதி