தமிழ்

gov

IMG 9852 copyஇலங்கையின் தலைநகரமான ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே அதிகார பிரதேசத்தில் பிரதான நிர்வாக நிறுவனம் என்றவகையில் எமது நிறுவனத்தின்மூலம் பொதுமக்களுக்கு இந்த இணையத்தலத்தின் ஊடாக அதிசிறந்த சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகரசபையின் நகர ஆணையாளர் என்றவகையில் உங்களுக்கு தயவாக நினைவூட்டுகின்றேன்.

அவற்றிடையே வரிப்பணம் - கட்டிட விண்ணப்பங்கள், விளையாட்டு மைதானம் - விழா மண்டபங்கள் - தகனகூடங்கள் என்பவற்றை ஒதுக்கிக்கொள்ளுவதற்கு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளுதல், சுகாதார சிகிச்சை நிலையங்கள், விளையாட்டு நிலையங்கள், நூலகங்கள் போன்ற எமது சேவை நிலையங்கள், கழிவு முகாமைத்துவம், கோட்டே அதிகார பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற புதிய அபிவிருத்தி கருத்திட்டங்கள், தினசரி எமது நிறுவத்தில் நிறைவேற்றப்படுகின்ற கடமைகளுடனும் உத்தியோகத்தர்களுடனும் தொடர்புகொள்தல் தொடர்பான தகவல்கள் என்பவற்றுடன் பெருமைமிக்க வரலாற்றுக்கு உரிமைகோறுகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நகரத்தில் வரலாற்றில் பதிந்துள்ள விடயங்கள், தலைநகரின் தனித்துவமான இடங்கள் போன்ற முக்கியமான பல தகவல்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளுவதற்கு இந்த இணையத்தலத்தின் ஊடாக இயலும்.

உலகமயமாக்கலின் புதிய போக்குகளின் கீழ் முழு பிரபஞ்சத்தையும் ஒரு விரல் நுனியின் ஊடாக உலாவி வருகின்ற நவீன உலகத்தில் அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடு என்ற வகையில் பொதுமக்களின் நலனோம்பலை நோக்கமாகக்கொண்டு நிறைவேற்றும் விடயத்தில் அரச சேவையில் இருக்கின்ற பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தொழில்நுட்பத்துடன் தொடர்புபட்டு வினைத்திறன்மிக்க உயர் சேவையை வரி செலுத்தும் மக்களுக்கு வழங்குவதற்கு நாம் கட்டுப்பட்டிருக்கிறோம் என்பதை அறியத்தருகின்றோம்.

 

ஆர். அந்த. ஷாலிகா எஸ். திருமதி ரணவீரா
நகராட்சி ஆணையர் மற்றும்
அதிகாரங்கள், செயல்பாடு, கடமைகளை நிறைவேற்றும் அதிகாரி
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மகாநகர சபை.